நோயாளியுடன் பழுதடைந்த ஆம்புலன்ஸ்- ஆம்புலன்சை தள்ளித் திரியும் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்
நோயாளியுடன் பழுதடைந்த ஆம்புலன்ஸ்- ஆம்புலன்சை தள்ளித் திரியும் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் நோயாளியுடன் இடை நடுவே கட்டைக்காட்டில் பழுதடைந்து காணப்படுகின்றது.
நோயாளியுடன் நித்தியவெட்டை வைத்தியசாலையில் இருந்து புறப்பட்ட குறித்த ஆம்புலன்ஸ் கட்டைக்காட்டில் பழுதாகி நின்றதால் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும்,சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவருமான பி.அலஸ்ரனுடன் சேர்ந்து கழக உறுப்பினர்கள் ஆம்புலன்சை தள்ளித்திரிகின்றார்கள்
நோயாளியை கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்ததால் மருதங்கேணி வைத்தியசாலை ஆம்புலன்சை தொடர்பு கொண்ட போது குறித்த ஆம்புலன்சும் பழுதடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது
உடனடியாக அருகில் உள்ள வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கடற்படையின் ஆம்புலன்சில் நோயாளி ஏற்றப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்
நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளார் காவு வண்டியில் இலக்கத் தகடுகள் கூட இல்லாத நிலையில் மிகவும் பழுதடைந்த நோயாளர் காவு வண்டியால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்
உரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புதிய நோயாளார் காவு வண்டி கோரி கடிதம் அனுப்பியிருந்த போதும் இதுவரை உரிய பதில் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகி
ன்றது.
