Breaking News

மசாஜ் நிலையத்தில் விபச்சாரம் செய்த பெண்கள்; ரகசிய தகவலால் சிக்கினர்..!

 மசாஜ் நிலையத்தில் விபச்சாரம் செய்த பெண்கள்; ரகசிய தகவலால் சிக்கினர்..!


சீதுவை


யில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்தியதில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (17) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


இதன்போது குறித்த விபச்சார விடுதியை நடத்திவந்த ஆண் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண் சந்தேக நபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த ஆண் சந்தேகநபர் தலகொலவேவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், பெண் சந்தேகநபர்கள் 20 முதல் 34 வயதுக்குட்பட்ட உடுகமை, அம்பாறை, வரக்காகொட மற்றும் மகுல்வேவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.