Breaking News

இந்த நாட்டில் மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் பருத்தித்துறை நகர சபை மக்களுக்கு இல்லை பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி ஆதங்கம்.....!

 இந்த நாட்டில் மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் பருத்தித்துறை நகர சபை மக்களுக்கு இல்லை பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி ஆதங்கம்.....!

இன்றைய தினம் பருத்தித்துறை மரக்கறி சந்தையானது மீண்டும் நவீன சந்தைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து பருத்தித்துறை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்றைய தினம் மாலை 5:30 மணியளவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது 

இதன் போது பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் மக்களின் நலன் சார்ந்து உரையாற்றிய போது மழை காலத்தில் மிருகங்கள் கூட மழை நீர் தேங்காத இடத்திற்கு தான் செல்லும் ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் பருத்தித்துறை நகரப்பகுதி சந்தையில் வியாபாரம் செய்யும் மக்களுக்கு இந்த சுதந்திரம் கூட இல்லை என தனது ஆதங்கத்தை பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி தெரிவித்துள்ளார்