சுப்பர் மடத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடையும், மாவீரர்களுக்கு அஞ்சலியும்..!
சுப்பர் மடத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடையும், மாவீரர்களுக்கு அஞ்சலியும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியளவில் சுப்பர் மடம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது. குருதியினை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றது. இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதில் பருத்தித்துறை நகரசபை சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
