Breaking News

வடமராட்சி கிழக்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பொருட்கள் உதவி.....!



வடமராட்சி கிழக்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பொருட்கள் உதவி.....!



யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வீடுகளில் இருந்து இடக்கால அனர்த்த முகாம்களில் 9 குடும்பங்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் 


இவர்களில் நாகர் கோவில் கிழக்கு பகுதியில் இருந்து 7குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நாகர் கோவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆழியவளை பகுதியில் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 


தங்க வைக்க பட்ட குடும்பங்களுக்கான உணவு வசதிகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றதோடு 


அவர்களுக்கான மருத்துவ பொருட்கள் உதவியினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் கனடாவில் வசிக்கும் அன்ரனி றொபின்சன் என்பவரின் நிதி அனுசரணையில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் அனர்த்த இடக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் காலை வழங்கி வைக்கப்பட்டது