Breaking News

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் தர்மபுரம் பொலிசாரால் மீட்பு



30 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் தர்மபுரம் பொலிசாரால் மீட்பு 



புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றிய நிலையில் கன்டர் ரக வாகனம் மற்றும் கப்ரக வாகனங்களில் முதிரை மரக்குற்றிகளை இன்று அதிகாலை 2.00மணியளவில் தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இரவு இரண்டு மணி அளவில் கொண்டு வந்த முதிரை மரக்குற்றிகளை மீட்ட பொலிசார் .வாகனங்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.வாகனம் மற்றும் சந்தேக நபர்களை நாளைய தினம்05.11.2025கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.