மீண்டும் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு அதிகரிப்பு மௌனம் சாதிக்கும் அரசாங்கம்.......!
மீண்டும் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு அதிகரிப்பு மௌனம் சாதிக்கும் அரசாங்கம்.......!
யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரியளவு சட்ட விரோதமான மண் விநியோகம் இடம் பெற்றறதை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான இளங்குமரன் அவர்கள் ஊடகவியலாளர் பூ.லின்ரன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க சட்ட விரோதமாக மண் விநியோகம் இடம் பெரும் இடங்களை பார்வையிட்டு அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவெடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறி சென்றதன் பின்னர்
ஒரு சில நாட்கள் சட்ட விரோதமாக மண் விநியோகம் இடம்பெறாமல் இருந்து தற்போது வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்கள் பெருப்பேற்றதன் பின்னர் மீண்டும் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மண் விநியோகம் இடம் பெற்று வருகின்றன
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
வடமராட்சி கிழக்கு பிரதேச எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளான தாழையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தின் பின் பகுதி மற்றும் குடாரப்பு பகுதி மற்றும் செம்பியன் பற்று வடக்கு பகுதி மற்றும் செம்பியன் பற்று வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள இயற்கை சமநிலையை பேனுவதற்கான நிரந்தர மர நடுகை எனும் பெயரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் வனப்பிரதேச பகுதி போன்ற இடங்களில் தற்போது பாரியளவு சட்ட விரோதமான மண் விநியோகம் இடம்பெற்று வருகின்றன
அத்துடன் இவ் சட்ட விரோதமான மண் அகழ்வானது பகல் நேரத்தில் குடாரப்பு பகுதியில் இடம்பெற்று வருவதாகவும் ஏனய பிரதேசங்களில் இரவு நேரங்களில் மண் விநியோகம் இடம் பெறுவதாகவும் தெரிய வந்துள்ளது
அத்துடன் தாழையடி பிரதேசத்தில் இடம் பெரும் சட்ட விரோதமாக மண் அகழும் இடத்தில் இருந்து மருதங்கேணி பொலிஸ் நிலையம் சுமார் 1kM தூரத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மற்றும் தற்போது குறிப்பிட்ட மண் அகழ்வு இடம் பெரும் இடங்கள் பாரியளவு நீர் தேக்கங்கள் போல் காட்சி அழிப்பதாகவும் இனி வரும் காலங்கள் மழை காலம் என்பதால் பாரியளவு உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள இடங்களாக மாறி உள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள் தமது ஐயத்தினை வெளிப்படுத்தி உள்ளதோடு குறிப்பிட்ட இடத்தை அடையாள படுத்தும் ஏற்பாடுகள் இல்லையெனில் நீர்த்தேக்கங்களை சமப்படுத்தும் நடவெடிக்கைகளை செய்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இவ் சட்ட விரோதமான மண் அகழ்வு களில் ஈடு படும் மண் மாஃபியாக்கு எதிராக உடனடியாக இல்லை என்றால் படி முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சென்றும் இது வரை எந்த விதமான நடவெடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் மக்கள் தற்போதைய அரசாங்கத்தில் அவநம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது
மற்றும் தற்போது பொறுபேற்றுள்ள வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்கள் இவ் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க போகிறார் என மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் எதிர் பார்த்து கொண்டுள்ளனர்
மற்றும் இவ் சட்ட விரோதமான மண் விநியோக செயற்பாடுகளுக்கு மருதங்கேணி பொலிசார் தமது கடமைகளை திறன் பட செய்தால் முற்றாக இவ் சட்ட விரோதமான செயற்பாடுகளை ஒழிக்கலாம் என எதிர்
பார்க்கப்படுகிறது
