Breaking News

வடக்கில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பெயர்.

 செய்தியாளர் 

வர்னன்



வடக்கில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பெயர்.



வட மாகாணம் கிளிநொச்சி வலய ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது. 


குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது ஏற்கனவே அதிபர் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப்பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


குறித்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளி நொச்சி வலயத்திற்கு சென்றுள்ள நிலையில் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.



அண்மையில் ஆசிரிய இட மாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக வடமாக ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது