மட்டக்களப்பில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு..!
மட்டக்களப்பில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டமானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவு தேர்தல்கள் ஆணையாளர் என்.ரேகன் ஏற்பாட்டில் வாகரை கலாசார மண்டபத்தில் இன்று (28) இடம் பெற்றது.
தேர்தல் இ-சேவைகள் பற்றிய அறிவை வழங்குவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகமும் இணைந்து வாகரை கரையோர மற்றும் பழங்குடி இன மக்களுக்கு தேர்தல் இ-சேவை தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட இளைஞர் சமூகத்தை குழுக்களாகப் பிரித்து இ-சேவைகள் பற்றிய பிரயோக ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இச்சேவையினை மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பணிப்பாளர் திருமதி திருமதி. அருணிதமயந்தி, கிராம சேவகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
