Breaking News

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தெரிவிப்பு.........!

செய்தியாளர் 

பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)


பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தெரிவிப்பு.........!




பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள் பங்களிப்பான வரவு செலவு திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் முதலாவது வாசிப்பு நிறைவடைந்து மக்கள் பார்வைக்காக எதிர் வரும் 28/10/2025 அன்று தொடக்கம் பொது இடங்களில் காட்சி படுத்த படவுள்ளது 



எனவே பச்சிளைப்பள்ளி பிரதேச வாழ் மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தலமை அலுவலகத்திலும் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக தலமை அலுவலகத்திலும் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினுடைய முகமாலை மற்றும் இயக்கச்சி போன்ற உப அலுவலகங்களிலும் தங்களுடைய வரவு செலவு திட்டத்தின் விடயங்களை பார்வை யிட முடியும் 



அவ்வாறு பார்வையிட்டு தங்களுடைய வரவு செலவு திட்டத்தின் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் அதனை எழுத்து மூலமாக பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் தலமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது அதனை நாங்கள் அதில் உள்ள விடயங்களை மாற்றம் செய்து ஏனய திருத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தை நாங்கள் சமர்ப்பிக்க கூடியதாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்வதோடு 


குறிப்பாக 28/10/2025 தொடக்கம் 10/11/2025 வரை மேற்குறித்த வரவு செலவு திட்டத்தினை மேற்குறித்த அலுவலகங்களில் பார்வையிட்டு மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும் என பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் அவர்கள் தெ

ரிவித்துள்ளார்.