வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் இன்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது
வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் இன்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது
கிளி நொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம்05.10.2025 நடைபெற்றது இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும்கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் பேசிய மக்கள் சட்டியில் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்களும்வீடமைப்பு அதிகார சபையினர் கிராமசவையாளர் என்ன பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் 15 வருட காலமாக நிரந்தர வீடு இன்றி தவித்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக 3 மாத கால பகுதிக்குள் விரைவாக புதிய ஓர் அழகான வீடுடை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதையினையும் விரைவாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் அத்துடன் மேலும் தெரிவிக்கையில் ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க அவர்கள் அங்கு கூறுகையில் வடகிக்கில் உள்ள நூறு பாடசாலைகள் அடுத்த வருட காலப்பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பயனடைய கூடும் எனவும் தெரிவித்தார்
