Breaking News

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது செம்பியன் பற்று பங்கின் புனித யூதாததேயூ ஆலய திருவிழா.....!

 ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது செம்பியன் பற்று பங்கின் புனித யூதாததேயூ ஆலய திருவிழா.....!





செம்பியன் பற்று புனித யூதாததேயூ திருத்தலத்தின் செம்பியன் பற்று பங்கு பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் மாபெரும் திருவிழாவான புரட்டாசி மாத திருவிழா இன்று(7) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 


யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புனித யூதாததேயூ ஆலய திருவிழா இன்று காலை5:40மணியளவில் திருச்செபமாலையுடன் திருவிழா திருப்பலியானது 6:30 மணியளவில் ஆரம்பமானது


இச் திருவிழா திருப்பலியானது செம்பியன் பற்று பங்கு தந்தை வன பிதா ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை டினேசன் அவர்களும் மற்றும் அருட்தந்தை துஷ்யந்தன் அவர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.



திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித யூதாதததேயூவின் திருச்சொரூப பாவனியும் அதனை தொடர்ந்து புனிதரின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் அருட் சகோதரர்கள் அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்

தனர்.