Breaking News

தமிழர் சார்பாக கையொப்பிட்ட இந்தியா அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்..! சி.வேந்தன்

 தமிழர் சார்பாக கையொப்பிட்ட இந்தியா அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்..! சி.வேந்தன்




இலங்கையில் இந்தியாவை மீறி எவரும் ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு முன்வைக்க முடியாது என்கின்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள், பாரதப்பிரதமாரான கௌரவ நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கவும், நிரந்தரமான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுத் தருவதற்கும், இந்த மண்ணிலே தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கும், தமிழர்களுக்கான நிரந்தர தீர்வையும் பெற்றுக் கொடுப்பதற்கும் முன்வரவேண்டும் என்றும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார் இன்று அவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது


இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு அரசியல் தீர்வாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அது இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் அத் தேர்தலை நடாத்தவும் உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.