எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது..! பா.உ. சி.சிறிதரன்
எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது..! பா.உ. சி.சிறிதரன்
எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் என்பது எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று அல்வாய் பாரதி விளையாட்டுகழகத்தின் 70 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்ல ஆரோக்கியமுள்ள, மன தைரியமுள்ள, ஒரு திடமான இதயத்தைக்கொண்ட பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு விளையாட்டுக்ள் மிக முக்கியமானவை.
நாங்கள் நலிந்த ஒரு சமூகம் அல்ல, நாங்கள் நிமிர்ந்து நிற்கின்ற மிகவும் ஆரோக்கியமுள்ள சமூக கட்டமைப்பைக் கொண்ட ஒரு இனம். ஆகவே எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் என்பது எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது அதன் முழு விபரமும் வருமாறு.
அல்வாய் பாரதி விளையாட்டு விளையாட்டு விழா அனைவரினதும் ஒற்றுமையுடன் இனிதே நடைபெறுகிறது. அனைவரதும் ஒத்துழைப்புடனும் வரவேற்புடனும் இந்த மைதானத்தில் இடம் பெறுவது மிக மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு விளையாட்டு, இரண்டு விளையாட்டு, மூன்று விளையாட்டு என்று அல்ல ஒரு கிராமம் சார்ந்த அல்வாய் கிராமம் சார்ந்த 12 கிராமங்களை உள்ளடக்கிய இங்குள்ள மக்களது ஒற்றுமையையும், பலத்தையும், வெற்றி வாய்ப்பையும், மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்ற நிகழ்வாக இன்றைய விளையாட்டு விழா அமைந்திருக்கின்றது.
இன்று எங்களுக்குள் இருக்கின்ற குரோதங்கள், விரோதங்களை மறந்து ஒற்றுமையாக ஒரு மாலைப்பொழுதிலே கிராமம் சார்ந்து, மக்கள் சார்ந்து, எங்களை வளர்த்துக்கொள்கின்ற ஒரு அருமையான நாட்களில் இந்த நாளும் அமைந்துள்ளது.
நல்ல ஆரோக்கியமுள்ள, மன தைரியமுள்ள, ஒரு திடமான இதயத்தைக்கொண்ட பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு விளையாட்டுக்ள் மிக முக்கியமானவை.
நாங்கள் நலிந்த ஒரு சமூகம் அல்ல, நாங்கள் நிமிர்ந்து நிற்கின்ற மிகவும் ஆரோக்கியமுள்ள சமூக கட்டமைப்பைக் கொண்ட ஒரு இனம். ஆகவே எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் என்பது எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது.
அந்த மனத்தைரியத்தையும், பிள்ளைகளுக்கான அந்த திடத்தையும், தைரியத்தை கட்டி வளர்க்கின்ற தைரியத்தை கொடுக்கின்ற மிகப்பொருத்தமான இடம் தான் இந்த விளையாட்டு.
தைரியமாக உணர்வோடு தான் சம்பவம் செய்யும் அந்த மகிழ்ச்சியையும், இந்த பிள்ளைகளிடம் பார்க்க முடிந்தது.
அதேபோல் வெளியிலுள்ள கழகங்கள், மற்றும் ஏனையவர்களுக்கிடையில் நடாத்திய இந்த விளையாட்டு விழா மிகவும் ஒற்றுமையையும், பலத்தையும் காட்டுகிறது.
ஆகவே அல்வாய் பாரதி சனசமூக நிலையமும், முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற நிகழ்வு அருமையானது. ஒருகாலத்தினுடைய பொருத்தமான விடயம், சாலச்சிறந்தது என்றார்.
