நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர் படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு, அதிபரின் உறவினரான யூரியூப்பர் ஒருவருக்கு அனுமதி ..!
நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர் படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு, அதிபரின் உறவினரான யூரியூப்பர் ஒருவருக்கு அனுமதி ..!
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று காலை உணர்வுபூர்வமாக நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தை செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செல்வன் மயில்வாகனம் கணகநாதன்
செல்வன் இராமநாதன் கோபிதரன்
செல்வன் சுந்தரலிங்கம் பழனி
செல்வன் நாகமுத்து செந்தில்வேல்
செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன்
செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன்
செல்வி அல்போன்ஸ் அமலவிஜி
செல்வி இரவிந்திரராசா அமிர்தா
செல்வி இராசரத்தினம் கவிதா
செல்வி இராமநாதன் மேதினி
செல்வி மார்க்கண்டு நாகலோஜினி
செல்வி பாலச்சந்திரன் ரஜிதா
செல்வி தாமோதரம் சகுந்தலா
செல்வி இராமச்சந்திரன் சங்கீதா
செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி
செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி
செல்வி குகசரவணமலை தர்சினி
செல்வி சுந்தரலிங்கம் தர்சினி
செல்வி பூலோகராசா துஷாந்தினி
செல்வி நவரத்தினசாமி உமாதேவி
செல்வி தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவச் செல்வங்கள் படுகொலை செய்யப்பட்டனர்
குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள்,பொதுமக்கள்,அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
எனினும் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதியளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு
அனுமதி மறுக்கப்படவில்லையென்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையிலும் நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் அதிபரின் உறவினரான வல்வெட்டித்துறையை சேர்ந்த யூரியூப்பர் ஒருவருக்கு நினைவேந்தல்
நிகழ்வுகளை செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டார்.
