யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா!
யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா!
யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு முத்தமிழ் அரங்கம் நேற்று மாலை(27) நடைபெற்றது. வீனஸ் விளையாட்டுக்கழக அரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியரான மு.ராஜவரோதயம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலகத்தின் இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி.மகிந்தினி விஜயகுமார் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வின் சிறப்பம்சமாக அறநெறி மாணவர்களின் தெய்வீக இசை, சிறுவர் நடனம், கோலாட்டம், திருக்குறள் ஓதுதல்,"மண்ணுக்குள் மறையுண்டுபோனவை மறுபடியும் உயிர்பெறவேண்டும்" எனும் தலைப்பிலான கவியரங்கம் , "புதியதோர் உலகம் செய்வோம்" எனும் சிறுவர் நாடகம், காத்தவராயன் சிந்துநடைக்கூத்து என்பவை இடம்பெ
ற்றது.
செய்தியாளர்
பூ.லின்ரன்
