யாழில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு!
யாழில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய வணிகப் பிரிவு மாணவர்களுக்கான கௌரவிப்பானது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நடைபெற்றது.
இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், சாதனை புரிந்த அனுபவ பகிர்வுகள் என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கௌரவிப்புகள் இடம்பெற்றன. இன்றைய நிகழ்வின்போது சுமார் 50 மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டன். அதனைத் தொடர்ந்து இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தி பெற்ற விதுஷா வாசுதேவனும் கௌரவிக்கப்பட்டார்.
இதில் ஆசிரியர்களான சகதிவடிவேல் பிரதீபன், பத்மநாதன், தர்சன், திருக்குமரன் ஆகியோரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் கலந்துகொண்ட
னர்.
செய்தியாளர்
பூ.லின்ரன்
