Breaking News

பருத்தித்துறை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி ஊர்தி முன் பட்டாசு கொலுத்திய இளைஞர் பருத்தித்துறை பொலிசாரால் கைது....!

 பருத்தித்து


றை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி ஊர்தி முன் பட்டாசு கொலுத்திய இளைஞர் பருத்தித்துறை பொலிசாரால் கைது....!



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம்திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதன் அடிப்படையில், திலீபன் வழியில்

வருகிறோம் என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த பவனி, இன்று பிற்பகல் 01:30 மணியளவில் பருத்தித்துறை நகர் பகுதியில் வந்தடைந்துள்ளது தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் வருகை தந்திருந்தது.


இதன் போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்லஸ் போல் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் 


இதன் போது பருத்தித்துறை நகரபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரால் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொலுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழ் நிலை காணப்பட்டது 


அதனை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் வேண்டு கோளுக்கு இணங்க பருத்தித்துறை பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்து கொண்டு

 சென்றனர்