மருதங்கேணியில் வீதியில் நின்ற பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி அகற்றம்
மருதங்கேணியில் வீதியில் நின்ற பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி அகற்றம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த வேப்பமரம் இன்று வெட்டி முற்றாக அகற்றப்பட்டது
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மர கூட்டுத்தாபனம் குறித்த மரத்தை வெட்டியகற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காணப்பட்டதாக கூறியே வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் இந்த மரம் வெட்டப்பட்டுள்ளது.
ஆயினும் குறித்த இடத்தில் எந்த வித விபத்து சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கும் பொதுமக்கள் பழமை வாய்ந்த வேப்பமரத்தை வெட்டி முற்றாக அழித்தமைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்
பூ.லின்ரன்
