Breaking News

சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வானது இன்றையதினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 சித்தங்கே


ணி சிறிகணேசா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வானது இன்றையதினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


மேற்கத்தேய வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு விழா ஆரம்பமானது. தொடர்ந்து இறை வணக்கம், வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள், பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.


பாடசாலையின் அதிபர் அருள்மாறன் கலைவாணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.றதனியும், சிறப்பு விருந்தினராக உள்ளூராட்சி திணைக்கள யாழ். பிராந்திய உதவி ஆணையாளரும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், அயல் பாடசாலை சமூகத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்ட

னர்.