மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..!
மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபையின் தலைவர் ரவி நிசங்கவிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டகைத்தொழில் அபிவிருத்த சபையின் பணிப்பாளர் எஸ்.டபில்யு.எஸ்.ஜீ. திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர் நா.கோகுலதாஸ் ஏற்பாட்டில் இவ் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில்துறை துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூர் தொழில் அதிபர்கள், தொழில் வல்லுனர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தவும், ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்டத்தில் தொழில்துறை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், தொழில்முனைவோரை மேம்படுத்துதல் மற்றும் பிராந்தியத்திற்குள் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் போது சந்திக்கும் சவால்கள், தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கான காணிப் பிரச்சினைகள், தொழிற்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொள்ளும் போதும் ஏற்படும் காலதாமதம், போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.