சிறப்பாக நிகழ்ந்தேறிய ஐங்கரநேசனின் வேர்முகங்கள் நூல் வெளியீடு!
சிறப்பாக நிகழ்ந்தேறிய ஐங்கரநேசனின் வேர்முகங்கள் நூல் வெளியீடு!
ஒரு ஊடகவியலாளனாக பொ. ஐங்கரநேசன் நிகழ்த்திய நேர்காணல்களில் இருந்து இருபது கலை, இலக்கியப் பேராளுமைகளுடனான உரையாடல்கள் தொகுக்கப்பட்டு வேர்முகங்கள் என்ற நூலாக வெளியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) மிகவும் சிறப்பாக நிகழ்ந்தேறியது.
யாழ். பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையின் தலைவர் கலாநிதி தி . செல்வமனோகரனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கருத்துரைகளை ஊடகவியலாளரும் படைப்பாளியுமான சர்மிலா வினோதினி, சமூக ஆய்வாளர் தெ. மதுசூதனன் ஆகியோர் ஆற்றியிருந்தார்கள்.
வெளியீட்டு உரையை இந்நூலை வெளியிட்ட எங்கட புத்தகங்கள் பதிப்பகத்தின் பணிப்பாளர் கு. வசீகரன் ஆற்ற, நூலை மூத்த இலக்கியவாதி க. சட்டநாதன் வெளியிட்டு வைத்தார். சொல்லேர் உழவர் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்த இந்நூலின் முதற் பிரதியை அவரது சகோதரி இராஜலட்சுமி பத்மநாதன் பெற்றுக்கொண்டார்.
5 பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வெளியாகிய வேர்முகங்கள் தொகுப்பு, ஓர் ஆவணப் பதிப்பாக இப்போது புதிதாக மேலும் ஒரு நேர்காணல் உள்ளடக்கப்பட்டு இலங்கையில் வெளியாகியுள்ளது. இந்நூலில் ஈழத்துக் கலை இலக்கிய ஆளுமைகள் கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி கலாநிதி நா. சுப்பிரமணியன், சுப்பிரமணியன், செங்கை ஆழியான், சு. வில்வரத்தினம், புதுவை இரத்தினதுரை, இரத்தினதுரை, கலா கலாநிதி பரமு புஸ்பரட்ணம், இ. பத்மநாபஐயர், ஞானரதன், கி.பி.அரவிந்தன் ஆகியோரதும், தமிழகத்தைச் சேர்ந்த பாரதிராஜா, சுஜாதா, டிராட்ஸ்கி மருது, சா, கந்தசாமி, மணவை முஸ்தபா, தி.சு. சதாசிவம், த. ஜெயகாந்தன், அறிவுமதி, டி.திலீப்குமார், பாரதிபுத்திரன், இன்குலாப் ஆகியோரதும் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்ற இவ்விழாவில் வரவேற்புரையை கலை இலக்கியச் செயற்பாட்டாளர் கை. சரவணன் நிகழ்த்த, விழாவின் இறுதியில் ஏற்புரையை நூலின் ஆசிரியர் பொ. ஐங்கரநேசன் நிகழ்
த்தினார்.
