Breaking News

சந்நிதியான் ஆச்சிரமம் புத்தளம் பகுதியில் உதவிகள்..!

 சந்நிதியான் ஆச்சிரமம் புத்தளம் பகுதியில் உதவிகள்..!




யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக,

தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை கல்வி கற்கின்ற 200 மாணவர்களுக்கு ரூபா 160,000 மெறுமதியான சில்வர் உணவுப் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கல்பிட்டி வீதி, அம்மா தோட்டம், பள்ளிவாசல் துறையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக கட்டுமானப் பணிகளுக்காக ரூபா 150,000 ஆலய நிர்வாகத்திடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


இவ்வுதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.