Breaking News

சமாதானத்திற்கான நடைப்பவனியில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள் இளைஞர்கள் அழைப்பு....!

சமாதானத்திற்கான நடைப்பவனியில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள் இளைஞர்கள் அழைப்பு....!



செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பாக பயிற்சி யூட்டப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைப்பவனி திட்டமிடப்பட்டுள்ளது 


குறித்த நடைப்பயணம் ஆனது உலக சமாதான தினத்தை முன்னிட்டு எதிர் வரும் 20.ஆம் திகதி காலை 8 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து அமைதி வழியாக நடப்பயணணம் ஆனது கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது 


இப் பயணத்தில் தங்களுடன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் மதகுருமார்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு நிற்கின்றனர் இளைஞர்கள்