சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக அருளுரையும், உதவிகளும்..!
சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக அருளுரையும், உதவிகளும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி, சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.
இதில் தெய்வீக அருளுரையாக,
“முருகபக்தியாளர்கள்” என்ற தலைப்பில் சைவப்புலவர் நி.பாபுதரன் ஆசிரியர் ஆன்மீக உரை நிகழ்த்தினார்
இதில் சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு நாக
தம்பிரான் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
ஆலய திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குவதற்காக
50 குட்டி அரிசி, மரக்கறிகள் வகைகள் மற்றும் 50,000 ரூபா நிதி என்பன வழங்கப்பட்டன.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு திக்கம் இந்து கலா மன்றத்
தினரால் சைவசமயத்தின் காவலன் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை கடந்த 06/08/2025 அன்று திருகோணமலை கிண்ணியா பிரிவில் அமைந்துள்ள உப்பாறு சித்தி விநாயகர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆலய புனரமைப்புத் பணிக்காக நிர்வாகத்தினரிடம் ரூபா 100,000 நிதியும்,
திருகோணமலை - திரியாய் பிரிவில் அமைந்துள்ள கல்லம்பத்தை தஞ்சை விநாயகர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
ஆலய புனருத்தாரணப் பணிக்காக நிர்வாகத்தினரிடம் 200,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
மேலும் திருகோணமலை - பூம்புகார் கிழக்கு பிரிவில் அமைந்துள்ள பாலையூற்று ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
ஆலய புனரமைப்பு பணிக்காக நிர்வாகத்தினரிடம் 100,000 ரூபா நிதியும் வழங்கப்
பட்டது.