Breaking News

வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை ஈர்க்கும் தாளையடி கடற்கரை....!


வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை ஈர்க்கும் தாளையடி கடற்கரை....!



யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவதை காணக்கூடியதாக உள்ளது 


சுற்றுலாக்கு பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான இலங்கைத்தீவில் மே,யூன்,யூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் அதிகளவு வருவது வழமை அதுவும் இலங்கை தீவில் இயற்கை அமைவிடம் வரலாற்று இடங்கள் போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் என்பவற்றை பார்வையிட்டு தமது விடுமுறை காலத்தை கழிப்பார்கள் 


இதனில் வடக்கு மாகாணத்தில் தற்பொழுது கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கடற்கரை சூழலான தாளையடி கடற்கரையானது இயற்கை அழகுடன் அமைதியான தோற்றத்தில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தன் வசப்படுத்தி கொண்டுள்ளது 


இதனில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தாளையடிகடற்கரையில் சுற்றுலா வாசிகள் தமது விடுமுறை காலங்களை கழிப்பதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர் அவை என்னவென்றால் 


கடற்கரையில் பொதுவான மலசலகூடம் இல்லை மற்றும் இரவு நேரங்களில் தங்குவதற்கு விடுதிகள் இல்லை மற்றும் மக்களை கவரும் வண்ணம் வர்த்தக நிலையங்கள் இல்லை மற்றும் திருப்தி கரமான உணவகங்கள் இல்லை போன்ற பிரச்னைகளை எதிர் நோக்குவதோடு மற்றும் சில நேரங்களில் சுற்றுலா வாசிகளின் சுதந்திர தன்மையும் மீறப்படுகிறது தமது விசனத்தை தெரிவித்துள்ளனர் 


எவ்வாறு எனில் சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் போதைப் பொருட்களை கடற்கரையில் பாவித்து மற்றும் அதனை அவ்விடத்தில் வீசுவதால் பல பிரச்சனைகள் வருவதாகவும் பல தடவைகள் இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் வருவதாகவும் அதனால் இடத்தின் அமைதி தமது சுகந்திரம் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் 


இதனை பொலிஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை கவணத்தில் கொண்டு மாற்று நடவெடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகளை செய்து சுற்றுலா வாசிகளின் சுகாதாரம் சுதந்திரம் எனப்வற்றை பேணி சுற்றுலா வாசிகள் இன்னும் அதிகமாக வருவதற்கு வழிவகுத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.