வேலணை பிரதேசத்தில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் வியாபார நடவடிக்கைகளை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்து வரி அறவிடப்படுவது அவசியம் - அனுசியா வலியுதுத்து!
வேலணை பிரதேசத்தில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் வியாபார நடவடிக்கைகளை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்து வரி அறவிடப்படுவது அவசியம் - அனுசியா வலியுதுத்து!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் வியாபார நடவடிக்கைகளை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்து அத்தொழில் சார் நடவடிக்கைகளை உறுதிசெய்து கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனுசியா ஜெயகாந்தால் வலியுறுத்தப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று (20.08.2025) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மேலும் கூறிய அவர்
எமது பிரதேசம் மிக குறைந்த வருமானம்கொண்ட ஒரு சபையாக இருக்கின்றது. இதனால்
சபையின் வருவாயை அதிகரிப்பது அவசியமானது.
அதனடிப்படையில் இதுவரைகாலமும் கண்டுகொள்ளப்படாதிருக்கும் கடலட்டை, மீன் வளர்ப்பு பண்ணைகள், பணப்பயிர் உற்பத்தியாளர் மற்றும் பதப்படுத்தி விற்பனை செய்யும் விற்பனையாளர், பால் உற்பத்தி, கால்நடைப் பண்ணைகள், விவசாய உற்பத்திகள், வியாபார நடவடிக்கை நிலையங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பதிவுக்குட்படுத்தி அவர்களது செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதுடன் வரி அறவீட்டையும் செய்வது அவசியம்.
எனவே குறித்த நடவடிக்கையை சபை துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் வேலணை பிரதேசத்தின் மாணவர்கள், சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் போன்றோரது தேவை கருதி தனியார் அல்லது அரச பேருந்துகளின் சேவையை அதிகரித்து, குறிப்பாக பாடசாலை நேரங்களிலும் மாலை நேரத்திலும், நாகுக்கான போக்குவரத்து இறுதி சேவையை 6.45 மணிக்குமாக நீடிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
குறித்த கருத்தை சபையின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அது குறித்து துறைசார் தரப்பினருடன் அதிகாரபூர்வமக தொடர்புகொண்டு தீர்வு காணப்படும் என தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்
பிடத்தக்கது.