Breaking News

இராணுவ முகாமை அகற்றக்கோரி பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு ஏற்பாடு

இராணுவ முகாமை அகற்றக்கோரி பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு ஏற்பாடு..!



யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுகத்திற்கு எதிர்ப்பக்கமுள்ள பருத்தித்துறை நீதிமன்றம், பருத்தித்துறை தபாலகம், பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றிற்கு செந்தமான காணியிலுள்ள இராணுவ முகாமை அகற்றக்கோரி எதிரவரும் 25/08/2025 அன்று காலை 8:30 மணியளவில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து பேரணி ஒன்று ஆரம்மாகி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்றடைந்து அரசாங்கத்திற்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வும் கவனீர்ப்பு போராட்டமும் இடம் பெறவுள்ளது. இது தொடரபாக பருத்தித்துறை நகரசபையில் இன்று காலை 9:00 மணியளவில் பருத்தித்துறை நகர சபையில் அங்கம்வகிக்கும் தேசிய மக்கள் சக்தியே தவிர்ந்த அனைத்து கட்சிகளும் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.