Breaking News

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக அருளுரையும் 292,700 ரூபா உதவிகளும்..!

 சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக அருளுரையும் 292,700 ரூபா உதவிகளும்..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்ச்சி சந்நிதியான் 

ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. 


இதில் ஆன்மீக அருளுரையாக மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் ஆற்றினார்கள்.


இதேவேளை உடையார்கட்டு தெற்கு, குரவில் பிரதேசத்தை சேர்ந்த மு/உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கும், 

கனகராயன்குளம் வடக்கு, பெரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் 

சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருத்திக்கும், 

புத்தளம் கருமாரி அம்மன் ஆலய ஸ்தாபகர் எஸ். மகேந்திரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக,

புத்தளம் சேனைக் குடியிருப்பு, மணல்குன்று, அபயபுர, அரலியபுயன, பிரதேசங்களில் வாழும் பல்லின சமூகங்களை சார்ந்தவர்கள் யாழ்ப்பாணம் பகுதிகள் சார்ந்த ஆலயங்களை தரிசிப்பதற்காக

போக்குவரத்து நிதியாக 125,000 ரூபா வழங்கப்பட்டதுடன் 

சங்கானை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,

நரம்பியல் புனருத்தாபன பிரிவுக்குரிய பக்கவாத நோயாளிகளுக்கான சிகிச்சை இயன் மருத்துவருக்கு வேதனம் வழங்குவதற்கு 70,000 ரூபா ஆடி மாத நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்

தனர்.