Breaking News

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க அவர்கள் இன்றைய தினம்17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  பிமல் ரத்னாக்க அவர்கள் இன்றைய தினம்17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார் 



இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் எதிர்வரும் இரண்டாம் திகதி அளவில் புது குடியிருப்பு பகுதிக்கு எமது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இந்த நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு 40,000 தென்னை செய்கையினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் இவ்வருடத்தில் 16 ஆயிரம் தென்னை செய்கையை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட அமைச்சர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் சென்று தென்னை செய்கை தொடர்பான சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடன் மற்றும் தென்னை செய்கையாளர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை பெற்றுச் சென்றுள்ளார்.


அதில் முதல் கட்டமாக வருகின்ற 02.09.2025 புது குடியிருப்பு பகுதிக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தர உள்ளார் வருகை தருகின்ற ஜனாதிபதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்களுக்கான ஆவணங்களை வழங்குவதுடன்,  புதுகுடியிருப்பு வட்டுவாகல் பாலத்தினை ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பதன் ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.


தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது இருக்கின்ற அரசியல்வாதிகள் பலர் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் குறிப்பாக முன்னைய காலங்களில் போலவே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


குறிப்பாக தமிழரசு கட்சியின் சுமந்திரன் அவர்கள் முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு 18.08.2025 அன்றைய தினம் வடக்கு கிழக்கு பல பகுதிகள் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 


இவர் இதற்கு முன்னர் முத்தையங்கட்டு பகுதிக்கு பல பதவிகளை வகித்த காலப்பகுதியில் அங்கு சென்றுள்ளாரா அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே அதனை கருதியே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.


முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்பு படுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றோம் இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.