Breaking News

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.....!

 வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.....!



யாழ் வடமராட்சி கிடக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மாலை 2 மணியளவில் மிகவும் சிறப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திரு கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது 

 

இவ் விளையாட்டு விழாவின் பிரதம விருந்தினராக திரு.செ.கிருபாகரன் பிரதம கணக்காளர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.பா முகுந்தன் பணிப்பாளர் விளையாட்டு திணைக்களம் வட மாகாணம் அவர்களும் மற்றும் திரு .க.சுதர்சன் கணக்காளர் பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு மேற்கு அவர்களும் கௌரவ விருந்தினராக திரு க.விஜிதரன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர் 



நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் உடுத்துறை பாடசாலை மாணவிகளின் வான்ட் வாத்திய இசையுடன் அழைக்கப்பட்டு விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது 


இவ் பிரதேச விளையாட்டு விழாவில் பிரதேச மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் கௌரபிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது 


இந்த வருட வடமராட்சி கிழக்கு பிரதேச கிண்ணத்தை மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் தமதாக்கி கொண்டதுடன் இவ் பிரதேச விளையாட்டு விழாவின் முக்கிய நிகழ்வான வடமராட்சி கிழக்கு பிரதேச கழகங்கழுக்கிடையிலே நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டியான கொடுக்குளாய் சக்திவேல் அனியினை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தினர் மோதி இருந்தனர் இவ் ஆட்டத்தில் சக்திவேல் அணியினர் 1:0எனும் கோள் கணக்கில் வெற்றி பெற்றனர் 


இவ் விளையாட்டு விழாவில் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொ

ண்டனர்