Breaking News

வத்திராயனில் வெடிக்க்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு...!

 வத்திராயனில் வெடிக்க்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு...!



யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காகா வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டு இருந்துள்ளனர் மதியம் 12:30மணியளவில் வெட்டிய அத்திவாரப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டை அவதானித்த வேலையாட்கள் வேலையினை அவ்வாறே இடை நிறுத்தி விட்டு மருதங்கேணி பொலிசார்க்கு தகவலை தெரிய படுத்தியுள்ளனர் 


இதன் பின் பிற்பகல் 5மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்