ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.....!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.....!
புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் குருநகர் பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் ஆடிமாத திருவிழா இன்று(6) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று காலை 6 மணியளவில் திருச்செபமாலையுடன் 7மணியளவில் திருவிழா திருப்பலி ஆரம்பமானது
இச் திருவிழா திருப்பலியானது கட்டைக்காட்டு பங்கு தந்தை வன பிதா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை ஜெபரன்சன் மற்றும் அருட்தந்தை யாவிஸ் மற்றும் அருட்தந்தை அலவன்ராஜ சிங்கன் அமலமரித்தியாகிகள் மற்றும் father றொகான் அவர்களால் கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டடது
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருச்சொரூப பாவனியும் அதனை தொடர்ந்து செபஸ்தியாரின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் அருட் சகோதரர்கள்
அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்றய முன் தினம் கொடியேற்றத்தை தொடர்ந்து நேற்று மாலை நற்கருணை திருவிழா திருப்பலியானது அருட்தந்தை அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் திருவிழா திருப்பியும் ஒப்புக் கொடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.