Breaking News

பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு.....!


பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு.....!



யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 10 மணியளவில் நடைபெற்றது. 


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான யாழ் மாவட்டத்துற்குரிய இளைஞர் கழக சம்மேளனங்களின் மாவட்ட சம்மேளனத்திற்கான 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் இன்றய தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் சி.அனுசன் தலைமையில் நடைபெற்றது.



இவ் நிர்வாக தெரிவில் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றி ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது பின் மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர் மற்றும் முன்னாள் மாவட்ட சம்மேளன உறுப்பினர்களால் அனுபவப் பகிர்வு மற்றும் சிறிய ஆலோசனைகள் மற்றும் பகிரப்படடதுடன் 


பின் தற்காலிகமாக தலைவர் மற்றும் செயளாலர் என்பன தெரிவு செய்யப்பட்டவுன் புதிய நிர்வாகத் தெரிவு ஆரம்பமானது  


முதலில் தலைவர் தெரிவில் தெல்லிப்பழை பிரதேச சம்மேளனத்தை சேர்ந்த சயீபன் மற்றும் அதே சம்மேளனத்தினை சேர்ந்த தேனுஜன் என்பவர்கள் போட்டியிட்ட நிலையில் தேர்தல் அடிப்படையில் தலைவர் தெரிவு இடம்பெற்றது இதனில் சயீபன் அவர்கள் 15வாக்குகளும் தேனுஜன் அவர்கள் 56 வாக்குகளும் பெற்று 41 வாக்குகளின் வித்தியாசத்தில் தேனுஜன் அவர்கள் 2025-2026 ஆண்டுக்கான யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டார்


 இதன் பின் செயளாராரகா பதவி வழியாக யாழ் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் அனுசன் அவர்கள்ளும் தெரிவு செய்யப்பட்டதுடன் பொருளாலராக டிலக்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டவுடன் ஏனய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர் 



இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடல்

தொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரம்அவர்களும் விருந்தினராக திரு K.D.C காமினி மாகாண பணிப்பாளர் வடக்கு மாகணம் சேதிய இளைஞர் சேவைகள் மன்றம் அவர்களும் பங்கு பற்றி இளைஞர்களுக்கான சிறப்பு உரையும் வழங்கினார்கள் 


இதன் பின் புதிய நிர்வாகத்தின் சிறிய கலந்துரையாடலுடன் இவ் நிர்வாக தெரிவு நிறைவு பெற்றது