ஆசிய கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தில் பங்கு கொள்ளும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன்......!
ஆசிய கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தில் பங்கு கொள்ளும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன்......!
இன்றய(3)தினம் சீனாவில் ஆரம்பமாகவுள்ள கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தொடரில் 18வயதின் கீழ் அணியில் பங்கு கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஏழு தமிழ்பேசும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இவ் இளைஞர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இவர்களில்
கொழும்பில் இருந்து நான்கு தமிழ் பேசும் இளைஞர்களும் மற்றும் கண்டியில் இருந்து இரண்டு தமிழ் பேசும் இளைஞர்களும் மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் இருந்து
மாஸ். எஸ். ஜோன் நதேனியா எனும் இளைஞரும் தெரிவு செய்யப்பட்டு ஆசிய கிண்ணத்தில் பங்கு கொள்வதற்காக தற்போது சீனாவுக்கு சென்றுள்ளனர்
இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி சமூகத்திற்கு ஒரு பெருமையான தருணம் எனவும் இவ் மாணவன் யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் என பல்வேறு தரப்பில் இருந்து மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம்
உள்ளன.