Breaking News

கலைஞர்களின் தலையீட்டால் இடைநிருத்தப்பட்ட வடமராட்சி கிழக்கு பண்பாட்டு பெரு விழா.....!


கலைஞர்களின் தலையீட்டால் இடைநிருத்தப்பட்ட வடமராட்சி கிழக்கு பண்பாட்டு பெரு விழா.....!



வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் வடமராட்சி கிழக்கு கலாச்சார பேரவையும் வருடம் தோறும் இணைந்து நடத்தும் நடப்பு ஆண்டுக்கான வடமராட்சி கிழக்கு பண்பாட்டு பெரு விழா நாளைய தினம் (30) திட்டம் இட்டு அதிகார பூர்வமாக உறுதிபடுத்தபட்ட நிலையில் சில கலைஞர்களின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளது 


இடைநிறுத்தப்பட்ட காரணங்கள் தொடர்பாக தெரியவருவதாவது 


இம் முறை வடமராட்சி கிழக்கில் உள்ள அனைத்து கலாமன்றங்களும் பண்பாட்டு பெருவிழாவில் உள்ளடுக்க படாத நிலை மற்றும் விருதுகளுக்காக கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட முறமையில் பாகுபாடு மற்றும் கலைஞர்களின் தகுதி மற்றும் பண்பாட்டு பெருவிழாவின் நிகழ்ச்சி நிரல் மற்றும் நிகழ்வுகளின் தெரிவு போன்ற பல காரணங்களால் கலைஞர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு கலாச்சார உத்தியோகத்தர்க்கும் இடையில் சிறிய முரன்பாட்டு நிலை காணப்பட்டது 


அதனை தொடர்ந்து குறிப்பிட்ட கலைஞர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகரை நேரடியாக சந்தித்து தமது பிரச்சனைகள் தொடர்பாக முறைப்பாடு செய்த போது இதனை உடனடியாக கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் நாளைய தினம் நடைபெற இருந்த பண்பாட்டு பெருவிழாவை கால வரையறை இன்றி இடைநிறுத்தி உள்ளார்