Breaking News

சிறப்பாக நடைபெற்ற கூட்டுறவு துறையின் ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீடு!

 கூட்டுறவு துறையின் யாழ். மாவட்ட சபையினால் வெளியிடப்படும் ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீடானது இன்றையதினம் அளவெட்டி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.



முதலில் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டுறவு கொடியேற்றி வைக்கப்பட, கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் வரவேற்புரை, தலைமையுரை, வெளியீட்டுரை என்பன இடம்பெற்றன.


அதனைத் தொடர்ந்து ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியிடப்பட்டது. பத்திரிகையை யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் வெளியிட்டு வைக்க அதனை அளவெட்டி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னைநாள் பொது முகாமையாளர் இ.இடபரூபன் பெற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பு பிரதிநிதிகள் வழங்கப்பட்டன.


அளவெட்டி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் த.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன், அளவெட்டி ப.நோ.கூ. சங்கத்தினர், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்,

ஏனைய கூட்டுறவு சங்கங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்துகொ

ண்டனர்.