Breaking News

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர்மீது மோதியது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப

ட்டது.