பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளரின் அதிரடி செயற்பாடுகள் ...!
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளரின் அதிரடி செயற்பாடுகள் ...!
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அண்மையில் யுகதீஸ் அவர்கள் தெரிவானார் இவர் தமது கடமைகளை பொருப்பேற்றதன் பின் நேற்றைய (20) தினம் தமது பிரதேச சபைக்கு உட்பட்ட பல இடங்களை பார்வை இட்டுள்ளார்
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக உடுத்துறை மற்றும் மருதங்கேணி கிராமங்களில் இந்த முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புணரமைப்பு செய்யப்படவுள்ள வீதிகளை பார்வையிட்டதுடன் மற்றும் வீதிகள் இல்லாமல் மணல் மேடகா இருக்கும் பாதைகளை வீதிகளாக மாற்று நடவெடிக்கைகளையும் எடுத்துள்ளார்
இதன் பின் பாடசாலைகளுக்கு விஜயம் செய்த தவிசாளர் மருதங்கேணி மற்றும் ஆழியவளை மற்றும் உடுத்துறை பாடசாலைகளில் கல்வி கற்கும் தற்போது புலமை பரிசில் பரீட்சையை எதிர் நோக்கவுள்ள மாணவர்களுக்கு புத்தகங்களை தவிசாளரால் வழங்கி வைத்துள்ளார்
இதன் பின் குடத்தனை கிராமம் பல காலமாக எதிர் நோக்கும் பிரச்சனையான பருத்தித்துறை நகர சபையால் குப்பை கள் அகற்றப்பட்டு தற்போது குப்பை மேடாக காணப்படும் குடத்தனை குப்பைமேட்டு பகுதிக்கு சென்று அப் பிரச்சினைக்குரிய இடத்தினை நேரடியாக பார்வையிட்டதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் நேரடியாக கேட்டறிந்துள்ளார்
மற்றும் இக் குடத்தனை குப்பை மேட்டு பகுதியில் ஒரு பாதின செடியும் இனங்காணப்பட்டதுடன் அதனை உடனடியாக அகற்றும் பணிகளை சம்மந்தப்பட்டவர்கள் செய்யும் மாறும் தவிசாளரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.