சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஆன்மீக அருளுரை..!
சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஆன்மீக அருளுரை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வராந்தம் இடம் பெறும் நிகழ்வில் மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை ஓய்வு பெற்ற ஆசிரியர் சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தினார்.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுபேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை இக்கிரானை, மல்லாகத்தை சேர்ந்த ஸ்கந்தவரோதயா கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கற்றல் நடவடிக்கைக்காக துவிச்சக்கர வண்டியொன்று வழங்கிவைக்கப்பட்டது.