சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இளைஞர்கள்
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இளைஞர்கள்!
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் நேற்றையதினம் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சுற்றுலாப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற மூன்று இளைஞர்களுமே, நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் இவ்வாறு சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சுற்றுலா பணயமானது 120 நாட்கள் கொண்டதாக அமைந்துள்ளதுடன், குறித்த இளைஞர்கள் 25 மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை இனங்காட்டவுள்ளனர்.
மேலும் தற்போது பொலுத்தீன் பாவனை மூலமாக சுற்றுப்புறச் சூழலானது மாசடைந்து வருகின்றது. அதனை தடுப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
வான் ஒன்றினை வீடாக மாற்றி, அந்த வானில் வீடு ஒன்றில் உள்ள அத்தியவசியமான தேவைகளை உள்ளடக்கி அந்த வானிலேயே இந்தப் பயணமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயணம் வெற்றிபெறுவதற்கு குறித்த இளைஞர்கள் அனைவரது ஒத்துழைப்புகளையும் வேண்டி நிற்கின்றனர்.