Breaking News

கடுமையான காற்று காரணம் யாழில் 12பேர் பாதிப்பு!

 கடுமையான காற்று காரணம் யாழில் 12பேர் பாதிப்பு!



கடுமையான காற்று காரணம் யாழில் 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுலியளவில் சேதமடைந்துள்ளது.


தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.


வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.


மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.