Breaking News

நெல்லியடியில் தீ விபத்து! - உடனடியாக செயற்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்த கரவெட்டி பிரதேசசபையினரும் பொதுமக்களும்

 நெல்லியடியில் தீ விபத்து! - உடனடியாக செயற்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்த கரவெட்டி பிரதேசசபையினரும் பொதுமக்களும்


இன்


று புதன்கிழமை அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். 


இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,


கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் அவர்கள் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு 4:42 மணிக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்திருந்த போதும் பிரதேச சபையின் ஊழியர்களின் முயற்சியும் பொதுமக்களின் பங்களிப்புடனும் தீ கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டது.


மின்னொழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தீயில் எரிந்த சொத்து மதிப்பு 2 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.