Breaking News

வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குதலும்...

வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குதலும்...

இன்று(16) காலை 10.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது 

"உடல் சிதைந்து உயிர் மடிந்த குருதியில் நனைந்து போன நிலம் மறந்து போகுமா? முள்ளிவாய்க்கால்..." என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.