Breaking News

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, துப்பாக்கி செயலிழந்ததால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மற்றவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் தடுப்புச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இரு கால்களும் முறிந்து படுகாயமடைந்துள்ளார்.

அந்த நேரத்தில், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அங்கு கூடியதாகவும் பொலிஸார் ​தெரிவித்தனர்.

தற்போது, துப்பாக்கிதாரி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.