மிகப் பிரமாண்டமாக இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை
மிகப் பிரமாண்
டமாக இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் சித்திரை புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று 07.04.2025 திங்கட்கிழமை மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பொ.சுரேஸ்குமார் தலைமையில் இன்று காலை 09.00 மணிக்கு சந்தை ஆரம்பமாகி உள்ளது இச் சந்தை மாலை 04.00 வரை இடம்பெறவுள்ளது என குறிப்பிட்ட தரப்பினர் கூறுகின்றனர்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி கலந்து கொண்டர் மற்றும் இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுகளை வாங்கி செல்கின்றனர்
இச் சந்தையில் குளிர்பாணங்கள் கடல் உலர் உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பல வகையான உற்பத்திகள் சந்தைப்படுத்தப்பட்டது