Breaking News

பதிவேற்றம் செய்யப்படாத வேட்பாளர்களின் விபரங்கள் தேசிய கட்சிகளில் தகுதி அல்லாதவர்கள் போட்டியிடுவதே காரணம் என சந்தேகிக்கும் அரசியல் ஆய்வா

 பதிவேற்றம் செய்யப்படாத வேட்பாளர்களின் விபரங்கள் தேசிய கட்சிகளில்  தகுதி அல்லாதவர்கள் போட்டியிடுவதே காரணம் என சந்தேகிக்கும் அரசியல் ஆய்வாளர்கள்.



கடந்த 24.04.2025 அன்று தேர்தல் திணைக்களத்தினுடைய உத்தியோகபூர்வ இணையத்தளதத்தினில் இலங்கையில் எதிர்வரும் 06ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் எனவும் அறிந்து கொள்வதற்கான வழி முறையையும் தேர்தல் திணைக்களம் ஆனது உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது 


அறிவிப்பை தொடர்ந்து தபால் மூல வாக்களிப்பும் நடைபெற்று முடிந்து தற்போது 06ம் திகதி தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்  தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் இன்று 30.04.2025 இரவு 07.50 வரையிலும்  திணைக்களம் தெரிவித்தது போன்று போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தினில் பதிவேற்றப்படவில்லை.


கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் இதே போன்று தேர்தல் திணைக்களமானது வேட்பாளர் விபரங்களை முன்கூட்டியே இணையத்தளத்தினில் பதிவேற்றி இருந்தது 


ஆனாலும் இதுவரையிலும் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை பதிவேற்றப்படாமையின் பின்புலத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாக சந்தேகிப்பதோடு அவர்கள் குறிப்பிடத்தக்க சில இடங்களில்  வேட்பாளருக்குரிய தகுதி அற்ற நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளமையாலேயே இவ்வாறு தேர்தல் திணைக்களத்தற்கு அழுத்தம் கொடுத்து வேட்பாளர் விபரங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.


வேட்பாளர்களை அறிய அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு 👉👉👉 

https://eservices.elections.gov.lk/pages/ec_ct_KYC_LGA.aspx