பளை பொதுச் சந்தைக்கு செல்லும் நுழைவாயிலில் மண் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுவதால் சிரமப்படும் பொது மக்கள்
பளை பொதுச் சந்தைக்கு செல்லும் நுழைவாயிலில் மண் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுவதால் சிரமப்படும் பொது மக்கள்
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளை பொதுச் சந்தைக்கு செல்லும் பிரதான நுழைவாயில் இரு புறமும் மண் கொட்டப்பட்டு பறவிக்காணப்படுவதால் மக்கள் சந்தைக்கு சென்று மரக்கறிகள் மீன் இறைச்சி என்பவற்றை கொள்வனவு செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
அதாவது பளை பொதுச் சந்தை கட்டிட தொகுதியானது தினம் தினம் மக்கள் வருகை தரும் முக்கிய இடமாக இருப்பதுடன் மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தை என்பன அருகருகே காணப்படுகின்றது இதனால் மக்கள் தமது அதிகளவான வருகையை மேற்கொண்டு வருகின்றனர்
இச் சந்தைக்கு உட்செல்லும் இரு புற பாதைகளும் மண் கொட்டப்பட்டு பறவிக்காணப்படுவதால் தாம் தமது அன்றாட செயற்பாடுகளை செய்ய மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் மற்றும் முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் வருபவர்கள் தாம் தமது வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக தினம் வரும் கட்டாயத்தில் இருப்பதாகவும் இவ் வீதியானது இவ்வாறே தொடர்ந்து காணப்படுவதால் தமது வாகனங்கள் இலகுவில் பழுதடைவதாகவும் தமது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்
மேலும் நுழைவாயிலில் வீதி புனரமைப்பு தொடர்பான சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ் வீதியினை மிக விரைவில் புணரமைப்பு செய்து தருமாறு கேட்டுநிற்கின்றனர்