Breaking News

வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை

 

வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை



யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கட்டைக்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் கெளரவ ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உரிய மருந்தாளர் இன்றி கடமையில் இருக்கும் வைத்தியர் சிரமங்களை எதிர்கொள்கின்றார்

நோயாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தகுதியான ஒரு மருந்தாளரை நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு உடன் நியமிக்குமாறு கிராம மக்கள் சார்பாக கெளரவ வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.