Breaking News

வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கைக்கடிதம் நேற்றைய தினம்(7) ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது

 வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கைக்கடிதம் நேற்றைய தினம்(7) ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது 




யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 


ஆரம்ப வைத்தியசாலையினை சுற்றியுள்ள கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் நேற்றைய தினம் (7) ஆளுநர் செயலகத்தில் பிற்பகல் 3மணியளவில் மருந்தாளரை நியமிக்கும் மாறு கோரிக்கை கடிதம் ஒப்படைக்கப்பட்டது 


குறித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயளாலர் கருத்து முன் வைக்கையில் இப்பிரச்சினை அடிப்படை பிரச்சினை யாகவும் இதற்கான தீர்வு மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார் 


கோரிக்கை கடிதத்தில் 500ற்கு மேற்பட்ட கிராம மக்களின் கையொப்பங்கள் இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த பிரச்சினை தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் உரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது